சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
கன்னடத்தில் வெளியான யுடர்ன் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார் சமந்தா. புலனாய்வு பத்திரிகையாளராக அவர் நடிக்கும் இந்த படத்தில் ஆதி முக்கியத்துவம் வாய்ந்த போலீசாக நடிக்கிறார். அதன்காரணமாகவே சமந்தாவின் பர்ஸ்ட் லுக் வெளியானதை அடுத்து ஆதியின் பர்ஸ்ட் லுக் ஒன்றும் வெளியிடப்பட்டது.
மேலும், யுடர்ன் படம் செப்டம்பர் 13-ந்தேதி வெளியாகயிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது இப்படத்தின் டிரெய்லர் ஆகஸ்டு 17-ந்தேதி வெளியாக இருப்பதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் சமந்தா.
மேலும், ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார்ந்து பார்க்க வைக்கும் அளவுக்கு அதிர வைக்கும் திரில்லர் காட்சிகள் கொண்ட இந்த படம் அனைவரையும் கவரும். இப்படத்தின் டிரெய்ரை சில ரசிகர்களுக்கு தன்னுடன் அமர்ந்து பார்க்கும் அதிர்ஷ்டம் கிடைத்திருப்பதாகவும் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் சமந்தா.