பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் டிவி வரலாற்றில் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியாக கடந்த வருடம் ஒளிபரப்பை ஆரம்பித்த பிக் பாஸ் நிகழ்ச்சி அமைந்தது. தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கடந்த வருடம் ஒளிபரப்பான முதல் சீசனில் போட்டியாளர்களாகப் பங்கேற்ற ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் இருவரும் இணைந்து நடித்த 'பியார் பிரேமா காதல்' படம் நேற்று வெளியானது. அதே தினத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள 'விஸ்வரூபம் 2' படமும் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்தே பங்கேற்ற ரைசா 9வது வாரத்தில் 63வது நாளில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அந்த நிகழ்ச்சியில் 8வது வாரத்தில் 53வது நாளில் வைல்ட் கார்டு மூலம் நுழைந்தார் ஹரிஷ் கல்யாண். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடித்த 'பியார் பிரேமா காதல்' படம்தான் கமல்ஹாசன் நடித்து நேற்று வெளிவந்துள்ள 'விஸ்வரூபம் 2' படத்திற்கு சரியான போட்டியாக அமைந்துள்ளது. தொகுப்பாளரின் படமும், போட்டியாளர்களின் படமும் ஒரே நாளில் வெளிவந்திருப்பது ஆச்சரிய ஒற்றுமை என்றாலும் இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது திங்கள்கிழமை முழுமையாகத் தெரிந்துவிடும்.