ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கமல் நடித்த விஸ்வரூபம்-2 பல சோதனைகளை கடந்து ஒருவழியாக நேற்று வெளியானது. இந்தப்படம் சொன்ன தேதியில் (ஆக-10) வெளியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த கமல், அதற்கு இரண்டு வாரம் முன்னதாகவே படத்தின் புரமோஷன் வேளைகளில் தீவிரமாக இறங்கிவிட்டார்..
இதற்காக தான் தமிழில் நடத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பயன்படுத்திக் கொண்டார். அதுமட்டுமல்ல தெலுங்கில் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் விஸ்வரூபம் டீமுடன் விசிட் அடித்து தெலுங்கு புரமோஷன்களை அமர்க்களப்படுத்தினார்..
மலையாளத்திலும் தற்போது முதன்முறையாக மோகன்லாலை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. கேரளாவில் வெளியாகியுள்ள விஸ்வரூபம்-2-வை விளம்பரப்படுத்தும் நோக்கில் தனது படக்குழுவினருடன் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் விஸ்வரூபம்-2 டீமுடன் சென்று கலந்து கொண்ட கமல், மோகன்லாலுடன் சேர்ந்து நிகழ்ச்சியை கலகலப்பாகியுள்ளார்கள்.