ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி வசூலை குவித்த படம் ஆர்.எக்ஸ் 100. இந்தப் படத்தில் நடித்த கார்த்திகேயா கும்மகொண்டா, ஒரே படத்தில் புகழின் உச்சிக்கு சென்றார். அதே வேகத்தில் இப்போது தமிழுக்கும் வருகிறார். ஜில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தை வி கிரியேஷன் சார்பில் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.