தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஸ்வரூபம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் பல நிதி பிரச்னைகளை கடந்து, 5 ஆண்டுகளுக்கு பிறகு இன்று(ஆகஸ்ட் 10) உலகம் முழுக்க ரிலீஸாகி உள்ளது. தமிழ், ஹிந்தியில் நேரடி படமாகவும், தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியாகி உள்ளது.
கமல் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள இப்படத்தில் முதல்பாகத்தில் நடித்த ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார், கமலுடன் ஆஸ்கர் ரவிச்சந்திரனும் இணைந்து தயாரித்திருக்கிறார். விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சி கதையுடன், முந்தைய பாக கதையும் கலந்து இப்படம் உருவாகி உள்ளது.
விஸ்வரூபம் 2 உலகம் முழுக்க ரிலீஸாகி உள்ளது. தமிழகத்திலும் ரிலீஸாகி உள்ள நிலையில், மதுரை, திண்டுக்கல், ராமநாடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மட்டும் ரிலீஸாகவில்லை. தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் மற்றும் விநியோகஸ்தர்கள் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக இப்படம் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.
கமல் அரசியலுக்கு வந்த பின்னர் வெளியாகும் முதல் படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கின்றன. ஆனால் 7 மாவட்டங்களில் விஸ்வரூபம் 2 படம் ரிலீஸாகாதது கமல் ரசிகர்களை வருத்தமடைய செய்திருக்கிறது.