பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கருணாநிதியின் மறைவுக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்திருந்தார் ரஜினி. இந்த நாள் கருப்பு நாள் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய திமுக.,வின் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கு தமிழக அரசு மறுத்தது. மாறாக காமராஜர் அரங்கம், ராஜாஜி ஹால், காந்தி மண்டபம் ஆகிய இடங்களில் ஒன்றை வழங்க அரசு தயாராக இருப்பதாக கூறியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்நிலையில் நடிகர் ரஜினி டுவிட்டரில் கூறியிருப்பதாவது : "மதிப்பிற்குரிய அமரர் கலைஞர் அவர்களுக்கு, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை" என பதிவிட்டிருக்கிறார்.