Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பூம்புகார் தந்த பூமாலை - கருணாநிதியும்... சினிமாவும்...!

07 ஆக, 2018 - 19:14 IST
எழுத்தின் அளவு:
Karunanidhi-and-Cinema

திமுக., தலைவர் கருணாநிதி, சென்னையில் காலமானார். அரசியலையும் தாண்டி சினிமாவில் சிறந்த படைப்பாளராகவும் கருணாநிதி இருந்தார். சினிமாவில் ஏராளமான படங்களுக்கு கதை, வசனமும், பாடல்களும் எழுதியுள்ளார்.

கருணாநிதி முதன்முதலாக வசனகர்த்தாவாக அறிமுகமான முதல் திரைப்படம் 1947-ம் ஆண்டு எம்ஜிஆர்., நடிப்பில் வெளியான ராஜகுமாரி. தொடர்ந்து, மந்திரி குமாரி", மருத நாட்டு இளவரசி", அபிமன்யு", பராசக்தி", மனோகரா", மணமகள்", பணம்", திரும்பிப்பார்", மலைக்கள்ளன்", ரங்கோன் ராதா", ராஜா ராணி", புதையல்", புதுமைப்பித்தன்", அரசிளங்குமரி", குறவஞ்சி", தாயில்லாப்பிள்ளை", இருவர் உள்ளம்", காஞ்சித்தலைவன்", பூம்புகார்", பூமாலை", அவன் பித்தனா?", பிள்ளையோ பிள்ளை", காலம் பதில் சொல்லும்", பாலைவன ரோஜாக்கள்", நீதிக்கு தண்டனை", பாடாத தேனீக்கள்", பாசப்பறவைகள்", நியாய தராசு", காவலுக்கு கெட்டிக்காரன்", மதுரை மீனாட்சி", புதிய பராசக்தி", மண்ணின் மைந்தன்", கண்ணம்மா", பாசக்கிளிகள்", உளியின் ஓசை", பெண் சிங்கம்", இளைஞன்", பொன்னர் சங்கர்" ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார்.

மேகலா பிக்சர்ஸ், அஞ்சுகம் பிக்சர்ஸ், பூம்புகார் புரடக்ஷன்ஸ், ஆகிய நிறுவனங்களில் தயாரிப்பில், "நாம்", ரங்கோன் ராதா", பூம்புகார்", பூமாலை", குறவஞ்சி", மறக்க முடியுமா", காஞ்சித்தலைவன்", எங்கள் தங்கம்", அணையா விளக்கு", பிள்ளையோ பிள்ளை", பூக்காரி", பாசக்கிளிகள்", ஆடு பாம்பே", குற்றவாளிகள்" மாடிவீட்டு ஏழை", பாடாத தேனீக்கள்", பாசமழை" பாசப்பறவைகள்", வண்டிக்காரன் மகன்", புயல் பாடும் பாட்டு" போன்ற படங்களை தயாரித்துள்ளார்.

கருணாநிதி எழுதிய பிரபலமான பாடல்கள்...

காகித ஓடம் - மறக்க முடியுமா - இசை - டி கே ராமமூர்த்தி


பொது நலம் - ரங்கோன் ராதா - இசை - டி ஆர் பாப்பா


நினைத்து வந்த செயல் ஒன்று - காஞ்சித்தலைவன் - கே வி மகாதேவன்


உலவும் தென்;றல் காற்றினிலே - மந்திரி குமாரி - இசை - ஜி ராமநாதன்


வாராய் நீ வாராய் - மந்திரி குமாரி - இசை - ஜி ராமநாதன்


பேசும் யாழே பெண்மானே - நாம் - இசை - சி எஸ் ஜெயராமன்


மனமில்லா மலருக்கோ மகிமை இல்லை - நாம் - இசை - சி எஸ் ஜெயராமன்


தீனா மூனா கானா - பணம் - இசை - விஸ்வநாதன் ராமமூர்த்தி


பூமாலை நீயே - பராசக்தி - இசை - ஆர் சுதர்சனம்


கா...கா...கா... ஆகாரம் உண்ண - பராசக்தி - இசை - ஆர் சுதர்சனம்


வாழ்கை எனும் ஓடம் - பூம்புகார் - இசை - ஆர் சுதர்சனம்


சிரிப்பு சிரிப்பு இதன் சிறப்பை - ராஜா ராணி - இசை - டி ஆர் பாப்பா


காவலுக்கு கெட்டிக்காரன் இந்த காக்கி சட்டைக்காரன் - காவலுக்கு கெட்டிக்காரன் - இசை - இளையராஜா


சோழ வளநாடு எங்கள் சொந்தம் என்று பாடு - உளியின் ஓசை - இசை - இளையராஜாபிரபல வசனங்கள்...
இவர் எழுதிய வசனங்களில் இன்றளவும் மக்கள் மனங்களில் பராசக்தி" திரைப்படத்தில் வரும் நீதிமன்ற காட்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குற்றவாளி கூண்டில் நின்று பேசும் வசனம் நீங்கா இடம் பிடித்தவை.

இதேப்போன்று, மனோகரா திரைப்படத்தில் அரசவையில் வசந்த சேனைக்கு எதிராக அரசனின் முன் நின்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேசும் வசனம், பூம்புகார் திரைப்படத்தில் பாண்டியனின் அரசவையில் கண்ணகியாக நடிகை விஜயகுமாரி பேசி நடித்த வசனம் என்றும் காலத்தால் அழியா புகழ் பெற்றவை.

எம்ஜிஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், ஜெய்சங்கர், சிவக்குமார், சத்யராஜ், பிரபு, முரளி, சந்திரசேகர், பிரஷாந்த் என்று இன்றைய தலைமுறை நடிகர்கள் வரை இவருடைய வசனம் பேசி நடித்திருக்கின்றனர்.

இதுதவிர சின்னத்திரையில் ரோமாபுரி பாண்டியன், ராமானுஜர் போன்ற தொடர்களும் கருணாநிதியின் கைவண்ணத்தில் உருவானவை.

கருணாநிதி பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்...

1. எம் ஜி ஆருக்கும் கருணாநிதிக்கும் முதன் முதலில் நட்பு ஏற்பட்டது சேலம் "மாடர்ன் தியேட்டர்ஸில்"2. கருணாநிதி எழுதி முதன் முதலில் அரங்கேற்றப்பட்ட நாடகம் "பழனியப்பன்" திருவாரூர் "பேபி டாக்கீஸில்" 1944-ல் அரங்கேற்றப்பட்டது.

3. 1947ல் வெளியான "ராஜகுமாரி" தொடங்கி 2011ல் வெளியான பொன்னர்-சங்கர் வரை சுமார் 64 வருடங்கள் திரையுலகில் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் என் பல்வேறு துறைகளிலும் பணியாற்றியிருக்கிறார் கருணாநிதி.

4. கருணாநிதி கடைசியாக வசனம் எழுதிய தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான "ஸ்ரீ ராமானுஜர்" மதத்தில் புரட்சி செய்த மகான் அந்த தொடருக்கு அவர் எழுத ஆரம்பித்த போது அவரது வயது 92. எழுதி வந்தபோதே உடல் நலம் பாதிக்கப்பட்டது.

5. கருணாநிதி 10 சமூக நாவல்களையும் 6 சரித்திர நாவல்களையும் எழுதியிருக்கிறார்.

6. 21 நாடகங்களை கருணாநிதி எழுதியிருக்கிறார். 1957ல் தி.மு.கவுக்குக் கிடைத்த உதயசூரியன் சின்னத்தைப் பிரபலபடுத்துவதற்காகவே "உதயசூரியன்" என்ற நாடகத்தை எழுதினார்.

7. கருணாநிதி பணியாற்றிய படங்களின் எண்ணிக்கை 69.

8. கருணாநிதி கதை வசனம் எழுதி எம் ஜி ஆர் நடித்த படங்களின் எண்ணிக்கை 9.

9. கருணாநிதிக்கு கலைஞர் என்ற அடைமொழியை வழங்கியது நடிகவேள் எம் ஆர் ராதா தான். கருணாநிதி எழுதிய "தூக்கு மேடை" என்ற நாடகத்தை பார்த்து இந்த பட்டத்தை வழங்கினார்.

10. ஒரு சினிமா வசனகர்த்தாவாக கருணாநிதியை உச்சத்திற்கு கொண்டு சென்ற திரைப்படம் "பராசக்தி" திரைப்படம்தான். இத்திரைப்படம் வசனத்திற்காகவே திரும்ப திரும்ப பார்க்கப்பட்டது.

11. எம் ஜி ஆருக்கு "புரட்சி நடிகர்" என்ற பட்டத்தை வழங்கியது கருணாநிதி.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
'2.0' படத்தில் அக்ஷய்குமார், 'இந்தியன் 2'வில் அஜய் தேவகன்'2.0' படத்தில் அக்ஷய்குமார், ... கருணாநிதியின் வசனங்கள் காலத்தை வென்று வாழ்பவை - நடிகர் சங்கம் இரங்கல் கருணாநிதியின் வசனங்கள் காலத்தை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
11 ஆக, 2018 - 17:18 Report Abuse
Vasudevan Srinivasan கலைஞர் அவர்களின் திரைப் பயணம் அவரது நீண்ட நெடிய அரசியல் பயணத்துக்கு பேருதவியாக இருந்தது..
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
09 ஆக, 2018 - 09:23 Report Abuse
A.George Alphonse During the lives time of the dead people no one high light or praise the people like this for their contribution towards various fields and always criticise them for their ego and political Kalppunerchi and after their death only these people praise them up to the sky level and decorate them with such slogans.So as Dr.M.Karunanidhi also.People will get only sympathy and read such articles and forget later on.This type of things are going on since the world ing and will continue forever and ever.
Rate this:
jay - toronto,கனடா
08 ஆக, 2018 - 11:53 Report Abuse
jay தமிழர்கள் செய்த மிக பெரிய தவறு .. இதனால் அடுத்த சந்ததிகளும் கஷ்ட படுகிறார்கள்
Rate this:
vasumathi - Sydney,ஆஸ்திரேலியா
08 ஆக, 2018 - 08:38 Report Abuse
vasumathi panam ra ondrai thavira, ivar mika sirantha padaippali, valluvar kottam, valluvar silai, poombuhar ena ivar sirantha kalai rasigar. anma santhi adayattum. Prarthikkirom.
Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
08 ஆக, 2018 - 08:06 Report Abuse
Srinivasan Kannaiya சினிமா அடித்தளம் அரசியல் அழகிய பங்களா...
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  Tamil New Film Natpe Thunai
  • நட்பே துணை
  • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
  • நடிகை : அனகா
  • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in