பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
கிட்டத்தட்ட மூன்று வருட காலத்தை தாண்டிவிட்டது நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவருடைய நட்பு, காதல் என்று கூட சொல்லலாம். இருவரும் ஒன்றாக இணைந்து விழாக்களில் கலந்து கொள்வதும், வெளிநாட்டுக்கு டூர் சுற்ற கிளம்புவதும் என அவ்வப்போது வெளியாகும் புகைப்படங்கள் இவர்கள் காதலில் விழுந்த கதையை சொல்லாமல் சொல்கின்ற்ன.
இந்த நிலையில் சமீபத்திய பிரண்ட்ஷிப் தினத்தன்று நயன்தாராவும் தானும் இணைந்து நிற்கும் புதிய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார் விக்னேஷ் சிவன். அதில், "இந்த அன்பில் (காதலில்) நிறைய நட்பு உள்ளது. இந்த நட்பில் அதைவிட நிறைய அன்பு (காதல்) நிறைந்துள்ளது.. ஹேப்பி பிரண்ட்ஷிப் டே.. நயன்தாரா " என ஒரு புது விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.