தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சரத்குமாரின் மகள் வரலட்சுமி, போடா போடி படத்தில் சிம்பு ஜோடியாக அறிமுகம் ஆனார். அதன்பிறகு தாரை தப்பட்டை படத்தில் நடித்தார். பிறகு அவர் நடித்த படங்களில் இன்னொரு ஹீரோயின், இரண்டாவது ஹீரோயின், வில்லி கேரக்டர்களிலேயே நடித்தார். தற்போது நடித்து வரும் சர்கார், சண்டக்கோழி 2ம் பாகம், நீயா 2ம் பாகம் படத்திலும் அவர் சோலோ ஹீரோயின் இல்லை.
தற்போது எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் என்ற படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்துள்ளார். இதனை லட்சுமி என்ற குறும்படத்தின் மூலம் புகழ்பெற்ற சர்ஜுன் இயக்கி உள்ளார். வரலட்சுமியுடன் சத்யராஜ், கிஷோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சுதர்சன் ஸ்ரீனிவாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுந்தரமூர்த்தி இசை அமைத்துள்ளார். இந்த மாத இறுதியில் படம் வெளிவருகிறது. படம் பற்றி இயக்குனர் சர்ஜுன் கூறியதாவது:
இது கிரைம் திரில்லர் படம். எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் என்கிற டைட்டிலிலேயே இது திரில்லர் படம் என்று சொல்லி இருக்கிறோம். சத்யராஜ் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக தூள் கிளப்பி இருக்கிறார். வரலட்சுமி இதுவரை நடித்திராத ஸ்டைலான ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். அவரது கேரியரில் இது முக்கியமான படமாக இருக்கும். பாண்டிச்சேரி, சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. படத்தை பார்த்த கிளாப் போர்டு சத்யமூர்த்தி பாராட்டியதோடு மொத்தமாக வாங்கி ரிலீஸ் செய்கிறார். இம்மாதம் படம் வெளியாகிறது என்றார் இயக்குனர் சர்ஜுன்.