சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி |
'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் மூலம் கதாநாயகியாக உயர்ந்தவர் யாஷிகா ஆனந்த். அந்தப் படத்தை 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் கண்டிப்பாகப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், 'பிக் பாஸ்' மூலம் பிரபலம் ஆகிவிட்டார் யாஷிகா. இதற்கு முன்பு, சில படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, ஆயிரம் கால் மண்டபம், நோட்டா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
நேற்று வெளியான 'மணியார் குடும்பம்' படத்தைப் பார்த்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் யாஷிகா ஆனந்த். அந்தப் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார். தியேட்டரில் படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு யாஷிகாவின் கவர்ச்சி நடனம் அதிர்ச்சி அளித்ததில் ஆச்சரியமில்லை. 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் நடிப்பதற்கு முன்பே அவர் அந்தப் பாடலுக்கு நடனமாடி முடித்திருக்கலாம். வந்த வாய்ப்பை வீணாக்காமல் பயன்படுத்திக் கொண்டிருப்பார்.
பிக் பாஸ் மூலம் புகழ் கிடைத்த பிறகு இனிமேல் அப்படி ஆடுவாரா என்பது சந்தேகம்தான்.