Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோபப்படும் கமல்ஹாசன், என்ன செய்யப் போகிறார் ?

04 ஆக, 2018 - 17:48 IST
எழுத்தின் அளவு:
Angry-Kamalhaasan-:-What-he-going-to-do.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இந்த வாரத் தலைவியாக ஐஸ்வர்யா தத்தா இருந்தார். இந்தவார நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவிற்கு சர்வாதிகாரி ஆக செயல்பட பிக்பாஸ் ஒரு 'டாஸ்க்' கொடுத்திருந்தார். அவருடைய ஆலோசகராக ஜனனியும், பாதுகாவலராக டேனியும் செயல்பட்டார்கள். 'டாஸ்க்' ஆரம்பமான நாளிலேயே பாலாஜிக்கும், ஐஸ்வர்யாவுக்கும் தகராறு ஆரம்பமானது. இந்த 'டாஸ்க்'கில் கலந்து கொள்ள மாட்டேன் என பாலாஜி பகிரங்கமாக அறிவித்தார்.

இதனால், ஆத்திரமடைந்த சர்வாதிகாரியாகச் செயல்பட்ட தலைவி ஐஸ்வர்யா, வீட்டிலுள்ள குப்பைக் கூடையை எடுத்து அதிலுள்ள குப்பைகளை பாலாஜி மீது கொட்டினார். மேலும், மற்றவர்களிடமும் கடுமையாக நடந்து கொண்டார். சில கெட்ட வார்த்தைகளையும் பேசினார்.

பாலாஜி மீது ஐஸ்வர்யா குப்பையைக் கொட்டிய செயல் மனிதத் தன்மையற்றது என்று சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்தது. டிவி நிகழ்ச்சி என்றாலும், அதை குழந்தைகளும் பார்க்கிறார்கள் என்ற பொறுப்புடன் விஜய் டிவியும், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமல்ஹாசனும் நடந்து கொள்ள வேண்டும் என்று பலரும் விமர்சித்தார்கள்.

இன்று சனிக்கிழமை என்பதால் கமல்ஹாசன் பங்கு பெறுவார். அவர் என்ன செய்யப் போகிறார் எனப் பலரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய நிகழ்ச்சியின் புரோமோ ஒன்றில் கமல்ஹாசன் கடும் கோபத்துடன் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

“இன்னைக்கு ராத்திரி 9 மணிக்கு பிக் பாஸ் வாங்கன்னு சொல்றது சம்பளம் வாங்கின கடமை. அதுக்கும் மேல ஒரு கடமையும், பொறுப்பும் எனக்கு இருக்கிறதா நான் நினைச்சிக்கிட்டிருக்கேன். அதைச் செய்ய வேண்டியிருக்கு. கமல்ஹாசன் என்ன செய்யப் போறாருன்னு நீங்க வேடிக்கை பார்த்துட்டிருங்க.... பாருங்க... நீங்க வேடிக்கை பாருங்க, நான் வேலையைப் பார்க்கிறேன்,” என கோபமாகப் பேசிவிட்டுச் செல்கிறார்.

இந்த வாரம் வெளியான பல மீம்ஸ்களில் கமல்ஹாசன் கடுமையாக கிண்டலடிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
ஒரேநாளில் இரண்டு படங்கள் ரிலீஸ் : சமந்தா பதில்ஒரேநாளில் இரண்டு படங்கள் ரிலீஸ் : ... குத்தாட்ட பாடலுக்கு நடனமாடிய யாஷிகா குத்தாட்ட பாடலுக்கு நடனமாடிய யாஷிகா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Sridhar - Jakarta,இந்தோனேசியா
05 ஆக, 2018 - 13:42 Report Abuse
Sridhar இந்த நிகழ்ச்சியை பற்றிய உண்மைகளை வெளியே புட்டு புட்டு வைக்கவேண்டும். இந்த ஆள் ஒவ்வொரு வாரம் சனி ஞாயிறன்று செய்யும் நிகழ்ச்சியே முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டது எனும்போது, அந்த வீட்டுக்குள் நடப்பதாக காட்டப்படும் நிகழ்ச்சிகள் எப்போதோ படமாக்கப்பட்டிருக்கவேண்டும். அதனால் தானே அவர்கள் தேதி சொல்லாமல் நாள் ஒன்று இரண்டு என்கிறார்கள்? இதில் நடிக்கும் ஆட்கள் வீடுகளுக்கு சென்று பார்த்தால் தெரியும் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் இருப்பதாக காட்டப்படும் நாட்கள் வரை வீட்டுக்குள் மறைந்து வாழ்வதை ஏற்கனவே மொத்த ஷோ வோட ஷூட்டிங்கை எப்போதோ முடித்திருப்பார்கள். எல்லாமே அவர்கள் வடிவமைத்த படி - பேச்சு, நடை உடை பாவனை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் விழிகள் - விளம்பரத்தை பார்க்கும் விழிகள் அதனால் வரும் காசு நிகழ்ச்சியை சர்ச்சைக்குரியதாக ஆக்கினால்சந்தோசம். விஸ்வரூபம் பாணியில் போரான படம் கூட 100 கோடி வசூல் பண்ண முடிந்தது போல இந்த ஷோவ்வும் நிறைய பணம் பண்ணலாம். இது வந்ததற்கு பிறகு தானே விஜய் டிவி சன் டிவி ஐ முதலிடத்திலிருந்து பின்தள்ள முடிந்தது சினிமாக்காரன் செய்யும் எல்லா வேலையும் காசு பார்பதற்க்காகத்தான் இருக்கும்.
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
05 ஆக, 2018 - 13:10 Report Abuse
Sathish பெருசா பில்டப் கொடுத்து பின்னர் சப்பென்று ஆக்குவது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அறவே பார்ப்பதில்லை. மற்றவர்களுக்கு இதெல்லாம் பழகிவிட்டது போலும்.
Rate this:
Arun - India,இந்தியா
05 ஆக, 2018 - 11:58 Report Abuse
Arun இந்த நிகழ்ச்சி மற்றும் இவரை பற்றி வரும் விமர்சனங்களை பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆயிட்டாப்போல பேசுறார்.....நல்லது தான்....
Rate this:
Kumaran Shanmugasundaram - alleppey,இந்தியா
05 ஆக, 2018 - 10:21 Report Abuse
Kumaran Shanmugasundaram ஜெயலலிதாவின் கால் தூசிக்கு சமமில்லாத நீங்கள் அவரை உருவகப்படுத்தி நிகழ்ச்சி உண்டாக்கி பெருமை பட்டு கொள்கிறீர்கள்.அவர் இருந்தால் இது நடந்திருக்குமா? இதுவா ஆண்மை? இருந்தபொழுது அடங்கி இருந்து விட்டு இப்போது பொங்குவது கோழைத்தனம்.
Rate this:
AnandaRajan - Singapore,சிங்கப்பூர்
05 ஆக, 2018 - 08:08 Report Abuse
AnandaRajan ஐஸ்வர்யா கெட்ட வார்த்தை பேசிவிட்டு பிக் பாஸிடம் அழுது விட்டால் அவர் மன்னிக்க படுவார். இது ஆண்களை அவமானப்படுத்தி கிண்டலடிக்கும். பிக்பாஸும், கமலகாசனும் பெண்களுக்கு சலுகை அளிப்பவர்கள். இவர்கள் துறையில் கெட்ட வார்த்தை பேசாதவர்களா. இவர் பெண்ணும், அவர் காதலனும் கெட்ட வார்த்தை பேசியது இல்லையா. ஐஸ்வர்யாவுக்கு ஏன் தண்டனை இல்லை. ஏன் இவ்வளவு சலுகை,???. நீங்கள் தண்டனை தர தவறினால் மக்கள் கொடுப்பார்கள்.
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Lockup
  • லாக்அப்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : வாணி போஜன்
  • இயக்குனர் :சார்லஸ்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in