இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் ஒவ்வொரு வாரமும் அதிக எண்ணிக்கையில் படங்கள் வெளிவருகின்றன. அதுவும் இந்த வாரம் பாலிவுட், டோலிவுட், சாண்டல்வுட், மல்லுவுட் என எல்லா உட்டுகளையும் தாண்டி சாதனை படைத்துள்ளது.
இன்று பாலிவுட்டில் அதிர்ஷியா, பென்னிகான், கர்வான், முல்க் என 4 படங்கள் வெளிவந்துள்ளது. தெலுங்கில் பிராண்ட் பாபு, சாய்லா சாவ், கூடச்சேரி, மன்யாம், சிவகாசிபுரம், தருவேட ஏவரு, யுவா தரம் என 7 படங்கள் வெளிவந்துள்ளது. மலையாளத்தில் சந்திரகிரி, இப்லிஸ் என 2 படங்கள் வெளிவந்துள்ளது. கன்னடத்தில் குமாரி 21எப், தியேராய், ஸ்டேட்மெண்ட், கதையுண்டு ஸ்ருவகிடா, வாசு நான் பக்கா கமரிக்கல் என 5 படங்கள் வெளிவந்துள்ளது.
இதுதவிர பெங்காலியில் 4 படங்களும், மராத்தியில் ஒரு படமும், உருதில் ஒரு படமும், பஞ்சாபியில் ஒரு படமும், அசாமியில் ஒரு படமும் வெளிவந்துள்ளது. தமிழில் 10 படங்கள் வெளிவந்து சாதனை படைத்துள்ளது. கஜினிகாந்த், மணியார் குடும்பம், காட்டுப்பய சார் இந்த காளி, எங்க காட்டுல மழை, கடல் குதிரைகள், நாடோடி கனவு, உப்பு புளி காரம், போயா, கடிகார மனிதர்கள், அரளி ஆகியவை இந்தப் படங்கள்.
ஒரே வாரத்தில் 10 படங்கள் வெளிவந்ததால் பல படங்களுக்கு சரியான தியேட்டர் கிடைக்கவில்லை. நேற்று நடந்த பத்திரிகையாளர் காட்சியின் போது காட்டுப்பய சார் இந்த காளி படத்தின் தயாரிப்பாளரும், படத்தின் ஹீரோவுமான ஜெய்வந்த் பேசும்போது... "இந்தப் படத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர் சங்கத்தில் வாங்கி விட்டோம். 4 படங்களுக்கு மேல் ரிலீஸ் பண்ண மாட்டோம் என்று அப்போது எனக்கு வாக்குறுதி கொடுத்தார்கள். இப்போது எப்படி இவ்வளவு படத்துக்கு அனுமதி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. சரியான தியேட்டர் கிடைக்காமல் திண்டாடுகிறேன். சிறுபடத் தயாரிப்பாளரை இப்படி வதைக்கலாமா?" என்றார்.
வெளியான 10 படங்களில் தயாரிப்பாளர் படத்திற்கு செய்த செலவு கையில் கிடைத்தாலே பெரிய விஷயம் தான்.