இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நான் மகான் அல்ல ஆதலால் காதல் செய்வீர் ஆகிய படங்களில் இயக்குநர் சுசீந்திரனும், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு மறுபடியும் இருவரும் இணையவே இல்லை. அதன் பிறகு தன்னுடைய படங்களுக்கு இமானை இசையமைப்பளராக்கிக் கொண்டார் சுசீந்திரன்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு யுவன் சங்கர்ராஜாவை தன் படத்துக்கு இசையமைக்க வைக்க விரும்பிய இயக்குநர் சுசீந்திரன், அவரை தொடர்பு கொள்ள முயன்றபோது யுவன் ஷங்கர் ராஜாவை சுற்றியுள்ள நபர்கள் அவரை சந்திக்கவிடவே இல்லை. இந்த விஷயத்தை தன் கைப்பட எழுதி டுவிட்டரில் பதிவிட்டார் சுசீந்திரன்.
அதைப் பார்த்த பிறகும் யுவன் சங்கர் ராஜாவிடமிருந்து பதில் இல்லை. அதன் பின்னர் யுவனுடன் தற்போது பணிபுரியும் ஒரு இயக்குநர் இந்த விஷயத்தை யுவனின் காதில் கோட்டிருக்கிறார். அதன் பிறகு சுசீந்திரனை அழைத்து அவருடைய ஜீனியஸ் படத்துக்கு இசையமைக்க முன் வந்துள்ளார்.
சமீபகாலமாக சிலர் யுவனை யாரும் சந்திக்க முடியாதபடி அவரைச்சுற்றி ஒரு தடுப்பை ஏற்படுத்தியுள்ளனர். அதனாலேயே பல இயக்குநர்கள் அவரைவிட்டு சென்றுவிட்டனர் என்கிற பேச்சு திரையுலகில் பரவலாக பேசப்படுகிறது.