ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கமல் நடிப்பில் விஸ்வரூபம் 2 படம் ரிலீஸ்க்கு தயாராகிவிட்டது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்திற்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பிரமீட் சாய் மீரா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், மர்மயோகி படத்தில் கமல் நடிக்க ரூ.4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது. படம் உருவாகாத நிலையில் வாங்கிய சம்பளத்தையும் கமல் திரும்ப அளிக்கவில்லை. எனவே வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கோடியை கமல் திருப்பி தர வேண்டும், அதுவரை விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என கோரியுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட இருக்கிறது.