பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விக்ரம் - ஹரி கூட்டணியில் உருவான படம் சாமி. சூப்பர் ஹிட்டான இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகியுள்ளது. விக்ரமிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். முதல்பாகத்தில் நடித்த திரிஷா, இந்தப்படத்திலும் தொடருவார் என்று சொல்லப்பட்ட நிலையில் அவர் நடிக்க மறுத்ததால், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், தற்போது த்ரிஷா அளித்துள்ள ஒரு பேட்டியில், சாமி-2 படத்தில் எனக்கான கேரக்டர் அழுத்தமானதாக இல்லை. ஏதோ சில காட்சிகளில் மட்டுமே வந்து செல்லும் வேடம் போன்று சித்தரிக்கப்பட்டிருந்தது. அதனால் தான் சாமி-2 படத்தை நிராகரித்தேன் என்று தெரிவித்துள்ளார் த்ரிஷா.