பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இயக்குனர் சுசீந்திரனும், இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் நான் மகான் அல்ல, ஆதலால் காதல் செய்வீர் படங்களில் இணைந்து பணியாற்றினார்கள். இரண்டு படத்தின் பாடல்களும் ஹிட்டானது. இப்போது மீண்டும் ஜீனியஸ் படத்தில் இணைந்து பணியாற்றுகிறார்கள். இந்த முறை இருவரும் இணைந்திருப்பதில் ஒரு சிறப்பு உள்ளது.
ஜீனியஸ் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விட்டது. இசை அமைப்பாளர் யாரையும் ஒப்பந்தம் செய்யாமலேயே படத்தை முடித்தார் சுசீந்திரன். எடுக்கப்பட்டு, எடிட் செய்யப்பட்ட படத்தை பார்த்த அனைவரும் இதற்கு யுவன் இசை அமைத்தால் தான் சிறப்பாக இருக்கும் என்று கருத்து சொல்ல படத்தை எடுத்துக் கொண்டு யுவனிடம் சென்றார் சுசீந்திரன்.
படத்தை பார்த்த யுவன் உற்சாகத்துடன் பின்னணி இசை கோர்ப்பு பணிகளை தொடங்கிவிட்டார்.
சுதேசிவுட் பிலிம் சார்பில் ரோஷன் தயாரிக்கும் இந்தப் படத்தில் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். மதிப்பெண்களை வைத்து குழந்தைகளின் தரத்தை நிர்ணயிக்கும் பெற்றோர்கள். அவர்களிடமிருக்கும் தனித்திறமை பற்றி கவலைப்படுவதில்லை. அப்படி புறக்கணிக்கப்படும் ஒரு ஜீனியசின் வாழ்க்கையை பற்றிய படம் இது.