ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கயல் படம் உட்பட 'கயல்' சந்திரன் நடித்த படங்கள் வணிகரீதியில் வெற்றியைப் பெறவில்லை. ஆனாலும் அவரது நடிப்பில் 'கிரகணம்', 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்' 'பார்ட்டி' என மூன்று படங்கள் தயாராகி உள்ளன. இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாக தக்க சமயம் பார்த்து காத்திருக்கின்றன.
இந்நிலையில், 'டாவு' என்ற புதிய படத்திலும் நடித்து வரும் 'கயல்' சந்திரன், தற்போது மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'நான் செய்த குறும்பு' என்ற அந்தப்படத்தை அறிமுக இயக்குநர் மகாவிஷ்ணு என்பவர் எழுதி, இயக்குவதோடு, அவரே தயாரிக்கிறார்.
இந்த படத்தில் 'கயல்' சந்திரனுக்கு ஜோடியாக அஞ்சு குரியன் நடிக்கிறார். தமிழில் சமீபத்தில் வெளியான 'சென்னை டு சிங்கப்பூர்' படத்தில் கதாநாயகியாக நடித்த அஞ்சு குரியன் சில மலையாள படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
கயல் சந்திரன் நடித்த படங்கள் கமர்ஷியலாக க்ளிக்காகவில்லை என்றாலும், அவரது அண்ணனின் உதவியால் சந்திரனை வைத்து தொடர்ந்து படங்கள் தயாரிக்கப்படுகின்றன.