'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
பிரபல பாப் பாடகர் டிரேக்சின் ஸ்கார்பியன் ஆல்பத்தில் இடம் பெற்ற பாடல் 'இன் மை பீலிங்ஸ்'. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்தப்பாடலை தொடர்ந்து, இன் மை பீலிங்ஸ் சேலஞ்ச் அல்லது கிகி சேலஞ்ச் என்ற பெயரில் ஒரு சவாலும் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதில் கலந்து கொள்ள விரும்புவோர், ஓடும் காரில் இருந்து இறங்கி இந்த பாடலுக்கு ஆடியபடியே காரில் ஏற வேண்டும். பின்னர், அந்த வீடியோவை இன் மை பீலிங்ஸ் என்ற ஹேஷ்டேக் உடன் பதிவு செய்ய வேண்டும்.
சவாலை நடிகை ரெஜினாவும் ஏற்று, ஓடும் காரிலிருந்து இறங்கி, 'இன் மை பீலிங்ஸ்' பாடலுக்கு ஆடியிருக்கிறார். கூடவே, நான் கிகி சவாலை முடித்துவிட்டேன். தென்னிந்திய பெண்களாலும் இந்த பாடலுக்கு நடன ஆட முடியும் என்று தெரிவித்துள்ளார்.
பாவாடை தாவணியில் கிராமத்துப் பெண் போன்ற தோற்றத்தில் ரெஜினா ஆடும் இந்த நடனம் ரசிகர்களை கவர்ந்துள்ளதுடன் சமூக வலைதளங்களில் வைலராகியது.