தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
தமிழில் வெளியான நேரம் படத்தில் நிவின்பாலியின் தங்கையாக நடித்தவர் அஞ்சுகுரியன். அதன்பிறகு பிரேமம் படத்தில் நடித்து புகழ்பெற்றார். தமிழில், தயாரான சென்னை டூ சிங்கப்பூர் படத்திலும் நடித்தார். ஆனாலும் அஞ்சு குரியன் பெரிதாக பேசப்படவில்லை.
தற்போது அவர் ஜூலை காற்றில் என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பது நேரம் மற்றும் பிரேமம் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்த அனந்தராக். இவர் இதற்கு முன்பு அமரகாவியம், வெற்றிவேல் படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இப்போது ஹீரோவாகியிருக்கிறார். படத்தில் சம்யுக்தா மேனன் இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார்.
ஜோஸ்வா ஸ்ரீதர் இசை அமைக்கிறார், டிமேல் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். சரவணன் பழனியப்பன் தயாரிக்கிறார். ஜீவாவின் உதவியாளர் கே.சி.சுந்தரம் இயக்குகிறார். "இது 100 சதவிகிதம் இன்றைய காதல் கதை. முன்பு போல காதலில் தோல்வி என்றால் கலங்கி விடாத காலம் இது. அடுத்த காதலை நோக்கிச் சென்று விடுகிறார்கள். அதையும் ஏற்றுக் கொள்கிறார்கள். கால மாற்றத்தில் காதல் எப்படி மாறியிருக்கிறது என்பதை சொல்லும் படம் இது. சென்னை, இலங்கை, மற்றும் போர்ச்சுக்கல் நாட்டில் படமாக இருக்கிறது" என்கிறார் இயக்குனர் கே.சி.சுந்தரம்.