'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமுத்திரகனி, ரம்யா பாண்டியன், கவின், மோனிகா, ராதாரவி நடித்துள்ள படம் ஆண் தேவதை. ஜிப்ரான் இசை அமைத்துள்ளார், விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார், தாமிரா இயக்கி உள்ளார். இது சமூகத்தில், குடும்பத்தில் ஒரு ஆணின் பங்கு என்ன என்பதை சொல்கிற படம்.
இந்தப் படத்தில் பாடல் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 1ந் தேதி (நாளை) சென்னை கலைவாணர் அரங்கில் பிரமாண்டமாக நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளையும் தயாரிப்பு தரப்பிலிருந்து செய்து வந்தார்கள். தற்போது பாடல் வெளியீட்டு விழா 1ந் தேதிக்கு பதிலாக வருகிற 10ந் தேதி மாலை 6 மணிக்கு அதே கலைவாணர் அரங்கில் நடக்கும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
தி.மு.க தலைவரும், முதுபெரும் சினிமா கலைஞருமான கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் கொண்டாட்டமாக ஒரு விழாவை தவிர்க்கலாம் என்று இந்த முடிவை தயாரிப்பு தரப்பு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.