'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இவன் தந்திரன் படத்திற்கு பிறகு ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் படம் பூமாராங். இதில் அதர்வா, மேகா ஆகாஷ், ஆர்ஜே.பாலாஜி, சதீஷ் நடித்து வருகிறார்கள். இந்த டீமில் இப்போது இந்துஜா இணைந்துள்ளார். மேயாதமான் படத்தில் ஹீரோவின் தங்கையாக நடித்து அதன் பிறகு மெர்குரி படத்தில் நடித்தவர் இந்த இந்துஜா. இப்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
பூமராங் படத்துக்கு இந்துஜா தேர்வானது எப்பபடி என்று விளக்குகிறார் இயக்குனர் கண்ணன்.
அதர்வா முரளி மற்றும் மேகா ஆகாஷ் கதாபாத்திரங்கள் பூமராங் ஸ்கிரிப்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஸ்கிரிப்ட் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் போது, மிகச்சிறப்பான நடிப்பை வழங்கும் இன்னும் ஒரு திறமையான கலைஞர் தேவைப்பட்டார். இந்துஜா நடித்த இரண்டு படங்களில் அவரது நடிப்பை பார்த்தவுடன், இந்த கதாபாத்திரத்துக்கு அவர் பொருத்தமானவர் என்று முடிவு செய்தேன்.
இந்துஜாவின் திறமையை பற்றி கூற திறமை என்ற வார்த்தை மிக சாதாரண வார்த்தை. ஒவ்வொரு காட்சியிலும் தன் தன்னிச்சையான நடிப்பின் மூலம் எனது வேலையை எளிதாக்கினார் இந்துஜா. அவரது கதாபாத்திரத்தின் மிக உயர்ந்த தரத்தை உணர்ந்து, மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்சன் பணிகளின் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளோம். என்றார் கண்ணன்.