மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி |
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், கிஷோர், டேனியல் பாலாஜி என மிகப்பெரிய நட்சத்திரக்கூட்டமே நடிக்கும் படம் வட சென்னை.
தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனமும், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படம் மூன்று பாகங்களாக உருவாகவிருக்கிறது என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஓரளவு முடிவடைந்துவிட்டதால் முதல் பாகத்தை இந்த வருட இறுதிக்குள் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வட சென்னை படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர்.மூன்று வருட கடுமையான உழைப்பில் வட சென்னை படத்தை உருவாக்கி இருப்பதாக ஏற்கனவே தனுஷ் சொன்னது போலவே படம் உருவாக்கப்பட்டுள்ளதை புரிய வைக்கிறது டீசர்.
அதேநேரம், வட சென்னை படத்தில் வன்முறை காட்சிகள் தூக்கலாக இருப்பது போல் தோன்றுகிறது. அதுமட்டுமல்ல, வன்முறை செய்வதை ஆதரிப்பதுபோல் வசனங்களும் இடம்பெற்றுள்ளன. வடசென்னை தணிக்கையிலிருந்து தப்பித்து வருமா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.