'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, இப்போது ஹாலிவுட் நடிகை. உலகில் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகளில் ஒருவர். தற்போது ஹாலிவுட்டில் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அங்குள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இதுதவிர பிரியங்கா நடிக்கும் தொலைக்காட்சித் தொடரும் அங்கு பிரபலம்.
இந்த நிலையில் பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகரான நிக்ஜோன்சை தீவிரமாக காதலித்து வருகிறார். அமெரிக்காவில் பிரியங்கா கவர்ச்சி புயல் என்றால் நிக்ஜோன்ஸ் இசைப் புயல். அவ்வளவு ரசிகர்கள் அவருக்கும் இருக்கிறார்கள். இருவரும் இணைந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள். நிகழ்ச்சிகளுக்கும் ஜோடியாக வருகிறார்கள்.
இந்த நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும், அவர்களது திருமண நிச்சயதார்த்தம் வாஷிங்டனில் எளிமையான முறையில் நடந்தது என்றும், அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனை பிரியங்கா மறுக்கவும் இல்லை. ஒப்புக்கொள்ளவும் இல்லை.