பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஹிந்தியில் கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் குயின். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது.
தமிழில் “பாரிஸ் பாரிஸ்”, தெலுங்கில் “தட்ஸ் மஹாலக்ஷ்மி”, கன்னடத்தில் “பட்டர்ப்ளை”, மலையாளத்தில் “ஜாம் ஜாம்” என்று தலைப்பு வைத்துள்ளனர். தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, கன்னடத்தில் பருல்யாதவ் மற்றும் மலையாளத்தில் மஞ்சிமா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தமிழ் மற்றும் கன்னடத்தில் நடிகர் மற்றும் இயக்குனரான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். தெலுங்கில் பிரஷாந்த் வர்மா இயக்குகிறார். மலையாளத்தில் நீலகண்டா இயக்குகிறார்.
மீடியன்ட் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் மனு குமரன், நான்கு மொழிகளிலும் படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது.
அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். படம் சிறப்பாக வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. படம் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என தயாரிப்பாளர் மனு குமரன் கூறியுள்ளார்.
ஒரே நேரத்தில் நான்கு மொழிகளிலும் படத்தை ரிலீஸ் செய்கின்றனர். அக்டோபர் மாதம் படம் திரைக்கு வர இருக்கிறது.