பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஹிந்தித் திரையுலகத்தில் புதுமுகங்கள் நடித்த படங்களுக்கு பெரிய வரவேற்பு என்பது அபூர்வமாகத்தான் கிடைக்கும். அந்த விதத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள தடக் படத்திற்கு அந்த அபூர்வ வரவேற்பு கிடைத்து வருகிறது. எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றாலும், மோசமாக இல்லாமல் இருக்கிறது என பாலிவுட்டில் சொல்கிறார்கள்.
தடக் படத்தின் மராத்தி ஒரிஜனலான சாய்ராட் படமே மொத்த வசூலில் 100 கோடியைக் கடந்திருக்கும் போது தடக் படம் அதைவிட அதிகமாக வசூலிக்க வேண்டும். ஆனால், 100 கோடியைக் கடக்குமா என்பதும் சந்தேகம்தான் என்று ஒரு தகவல் இருக்கிறது. படம் வெளிவந்துள்ள ஒரு வாரத்திற்குள் 43 கோடி ரூபாய் வசூலைக் கடந்திருக்கிறது என்கிறார்கள். எப்படியும் 50 கோடி வசூலைக் கடந்துவிடும்.
படத்திற்குக் கிடைத்த மோசமான விமர்சனம்தான் படத்தின் வசூலை பாதித்துள்ளதாக பாலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். இருந்தாலும் ஜான்வி கபூர் முதல் படத்திலேயே நல்ல பெயரைப் பெற்றுள்ளார். அவர் நடிக்கும் அடுத்த படத்தை அவருடைய அப்பா போனி கபூர் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.