பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், கார்த்தி, சத்யராஜ், சாயிஷா, ப்ரியா பவானி சங்கர், அர்த்தனா, சூரி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் கடைக்குட்டி சங்கம்.
குடும்ப உறவுகளையும், விவசாயத்தின் பெருமையையும் சொன்ன இப்படத்திற்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் அமோக வரவேற்பு கிடைத்திருப்பதுடன் நல்ல வசூலும் ஈட்டியிருக்கிறது.
இதை படக்குழுவினர் விழாவாக கொண்டாடியுள்ளனர். கடைக்குட்டி சிங்கம் படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் படத்தை வாங்கி வெளியிட்ட சக்தி பிலிம் பேக்டரி சக்தி, கார்த்தி, சூர்யா, பாண்டிராஜ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு தங்கச்சங்கிலி பரிசளித்து கவுரவித்தார்.
தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, தனது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் விவசாய மேம்பாட்டிற்காக ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். இதை நெல் ஜெயராமன் உள்ளிட்ட விவசாயிகள் பெற்று கொண்டனர். சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் மேற்பார்வையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.