மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பிரபலமான மேடை நாடக கலைஞராக இருந்தவர் குரு சோமசுந்தரம். ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன்பிறகு கடல், பாண்டியநாடு, ஜிகிர்தண்டா, தூங்காவனம், படங்களில் நடித்தவர் ஜோக்கர் படத்தில் ஹீரோவானார். அதன்பிறகும் தொடர்ந்து ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் குற்றமே தண்டனை, யாக்கை, பாம்பு சட்டை, படங்களில் குணசித்திர கேரக்டர்களில் நடித்தார். வஞ்சகர் உலகம் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஓடு ராஜா ஓடு என்ற படத்தில் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். விஜய் மூலன் டாக்கீஸ், கேண்டில் லைட் புரொடக்ஷன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை ஜதின் இயக்குகிறார். குரு சோமசுந்தரத்துடன் நாசர், லட்சுமி ப்ரியா, ஆஷா ஷெனாய் உள்பட பலர் நடிக்கிறார்கள். இது காமெடி த்ரில்லர் படம். படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது. அடுத்த மாதம் வெளிவருகிறது.