டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்க, எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இந்த படத்தில் காமெடியனாக யோகிபாபு நடிக்கிறார்.
சிவகார்த்திகேயனின் ஆஸ்தான காமெடியன் சதீஷ் தான். தற்போது யோகிபாபுவுக்கு மார்க்கெட் இருப்பதால் அவரை பிரதான காமெடியனாக்கியுள்ளனர். படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இப்படத்தில் ராதிகா சரத்குமாரும் இணைந்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக ராதிகா நடிப்பதாக தகவல் அடிபடுகிறது.
ராதிகா சரத்குமார், யோகிபாபு இருவரில் 'யோகி'பாபு ஏற்கெனவே சிவகார்த்திகேயனுடன் 'ரெமோ' படத்தில் நடித்துள்ளார். ராதிகா சரத்குமார் சிவகார்த்திகேயனுடன் இதுவரை இணைந்து நடித்தது இல்லை. இந்தப்படத்தில்தான் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர்!