ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஹிந்தித் திரையுலகில் கனவுக் கன்னியாக இருந்து மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நாயகியாக அறிமுகமாகியுள்ள 'தடக்' படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. படம் முதல் நாளிலேயே 8 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை என்பதால் வசூல் இன்னும் அதிகமாகும் என்கிறார்கள்.
'தடக்' படத்தைப் பொறுத்தவரையில் நட்சத்திரங்களின் சம்பளம் குறைவுதான். அதன் படப்பிடிப்பு நாட்களுக்கான செலவுதான் படத்தின் அதிகப்படியான பட்ஜெட்டாக இருக்கும். இந்தப் படத்தில் நடித்ததற்காக நாயகி ஜான்வி கபூருக்கு 60 லட்ச ரூபாயும், நாயகன் இஷான் கட்டருக்கு 60 லட்ச ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாம். படத்திற்கான கலைஞர்களில் அதிகமான சம்பளமாக 4 கோடி பெற்றவர் படத்தின் இயக்குனர் சஷாங் கைதான். ஜான்வி கபூர் அப்பாவாக நடித்த ராணா சிங், 80 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார்.
'தடக்' படத்தின் ஒரிஜினலான 'சாய்ராட்' மராத்தி படத்திற்கு இசையமைத்த அஜய் - அதுல் ஆகியோர் ஒன்றரை கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார்கள். படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமை 2 கோடி கொடுத்து வாங்கப்பட்டுள்ளதாம். இவைதான் படத்தில் சம்பளமாகக் கொடுக்கப்பட்ட அதிகத் தொகை என்கிறார்கள். ஆனால், படத்தின் பட்ஜெட் மொத்தமாக 70 கோடி என பாலிவுட் தகவல் தெரிவிக்கிறது. அதை வசூலிக்க வேண்டுமென்றால் படம் 100 கோடி வசூலைக் கடக்க வேண்டும்.
அதே சமயம் மராத்தி 'சாய்ராட்' படம் 5 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு 100 கோடி வசூலைக் கடந்தது. அந்த சாதனையை 'தடக்' முறியடித்தால்தான் படத்திற்குப் பெருமை. இல்லையென்றால் ஒரிஜனல் 'சாய்ராட்' படத்துடன் ஒப்பிட்டுப் பேசிக் கொண்டேயிருப்பார்கள்.