வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தமிழ் சினிமாவில் 1997ம் ஆண்டு வெளிவந்த 'விஐபி' படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சிம்ரன். அதன் பின் விஜய், அஜித், பிரஷாந்த், சூர்யா ஆகியோருடன் பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். 90களின் இறுதியிலும், 2000லும் சிம்ரன் தான் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நாயகியாக இருந்தார்.
கமல்ஹாசன், சரத்குமார், விஜயகாந்த் போன்ற சீனியர் நடிகர்களுடன் கூட ஜோடியாக நடித்திருக்கிறார். அவர் நம்பர் 1 நாயகியாக இருந்த போது கூட ரஜினிகாந்த் படத்தில் நடிக்க முடியவில்லை. தமிழில் அறிமுகமாகும் ஒவ்வொரு நடிகையும் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க ஆசைப்படுவது வழக்கம். ஏனோ, அது சிம்ரனுக்கு அப்போது அமையாமல் போனது.
20 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் சிம்ரனுக்கு, ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் படத்தில் சிம்ரன் நடிக்கிறார் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள். ஆனால், அவர்தான் ரஜினிகாந்த் ஜோடியா என்பதைத் தெரிவிக்கவில்லை. சினிமாவில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும். ஆனால், சிம்ரனுக்கு அது நடக்க 20 வருடங்கள் ஆகியிருக்கிறது.