‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அங்கு சின்னபாபு என்ற பெயரில் இப்படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது.
சமீபத்தில் இப்படத்தை பார்த்த துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, "கிராமத்து பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை, வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரசியமான நல்ல படம்" என பாராட்டியிருந்தார்.
இதற்கு கார்த்தி நன்றி தெரிவித்திருக்கிறார். "நம் நாட்டு மரபு, குடும்ப உறவுகள், விவசாயம் இவை தான் காலத்துக்கும், இந்த சமுதாயத்தை காக்கும் என்பதை போற்றும் திரைப்படமாக கடைக்குட்டி சிங்கம் அமைந்துள்ளது என்று சுட்டிக்காட்டி பாராட்டிய உங்களுக்கு(துணை ஜனாதிபதி) எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்" என டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார் கார்த்தி.