தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஷமன் பிக்சர்ஸ் சார்பில் ஷமன் மித்ரு தயாரித்துள்ள படம் தொரட்டி. பி.மாரிமுத்து இயக்கி உள்ளார். குமார்ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் ரோஷன் பின்னணி இசையமைத்துள்ளார், வேத்சங்கர் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். தயாரிப்பாளர் ஷமன் மித்ரு ஹீரோவாக நடித்துள்ளார். சத்யகலா, அழகு, ஜானகி, முத்துராமன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இது வயல்களில் ஆட்டுக்கிடை போட்டு வாழும் மக்களின் கதை. பரவலான பாராட்டுகளை பெற்றுவந்த இந்தப் படத்தை திருக்குமாரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் வாங்கி வெளியிடுகிறார். இதுகுறித்து படத்தின் தயாரிப்பாரும், ஹீரோவுமான ஷமன்மித்ரு கூறியதாவது:
மலை, மேடு கடந்து நாடோடியா வாழ்ந்த வாழ்க்கையை படமாக உங்கள் முன் கொண்டு வரோம். கிடைபோடும் கீதாரி கிடை காவல் காக்கும் ஆயுதம் தாங்க தொரட்டி. வெட்டவெளி வாழ்க்கை வெள்ளந்தியான கூட்டம், ஆட்டோட ஆடா அலையும் அந்த அப்பாவி கூட்டம்.
தவறான பாதைக்கு சென்ற ஒருவனை திருந்தவிடாமல் தடுகிறது ஒரு கும்பல் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறான் என்பது கதை சுருக்கம். திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், தொரட்டி படத்தை வெளியிடுறாங்க. மொத்த பேரும் ஒன்னு கூடி வேர்வை சிந்தி விளைய வச்ச வெள்ளாமைய குந்துமணி சிந்தாம வீடு வந்து சேர்க்கும் விவசாயி மாதிரி பாடுபட்டு உழைத்து சாமிக்கு படைப்பது போன்று உங்கள் முன் படைக்கிறோங்க என்கிறார் ஷமன்மித்ரு.