ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஐசரி கணேஷின் 'வேல்ஸ் பிலிம்ஸ்' நிறுவனமும், பிரபு தேவாவின் 'பிரபுதேவா ஸ்டுடியோஸ்' நிறுவனமும் இணைந்து 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு' என்ற அனிமேஷன் படத்தை தயாரித்து வருகின்றன. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அனுபவம் வாய்ந்த அருள்மூர்த்தி இந்தப்படத்தை இயக்கி வருகிறார்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உட்பட அத்தனை கேரக்டர்களையும் அனிமேஷனில் உருவாக்கிவிட்ட நிலையில், இந்த படத்தில் லேட்டஸ்ட் இணைப்பாக இப்போது சாயிஷாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
அதாவது கோச்சடையான் படத்தில் தீபிகா படுகோனேவின் உருவம் அனிமேஷனில் உருவாக்கப்பட்டதைப்போல் 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு' படத்தில் சாயிஷாவின் உருவத்தை அனிமேஷனில் உருவாக்கியுள்ளனர்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் இரண்டாவது பாகமாக எம்.ஜி.ஆர். எடுக்க ஆசைப்பட்ட படம்தான் கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு. எம்.ஜி.ஆரின் ஆசையை பல வருடங்கள் கழித்து அனிமேஷன் மூலம் நிறைவேற்றுகின்றனர்.
இந்த படத்திற்கு டி,இமான் இசை அமைக்க, பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார்.