ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலா இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக ஜோதிகா நடித்த படம் நாச்சியார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடித்திருந்தார். இப்படத்தில் ஜோதிகா மற்றும் ஜி.வி.பிரகாஷின் நடிப்பு பேசப் பட்டதோடு அந்த படமும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், தற்போது நாச்சியார் படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடும் வேலைகள் நடக்கிறது. அப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு ஜான்சி என்று டைட்டில் வைத்துள்ளனர்.