Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிறுவன் யாசினின் படிப்பு செலவை ஏற்கிறேன் : ரஜினி

15 ஜூலை, 2018 - 10:45 IST
எழுத்தின் அளவு:
rajini-agree-the-study-cost-of-erode-boy

ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர்குளத்தை சேர்ந்த 2 ம் வகுப்பு படிக்கும் மாணவனான யாசின் கடந்த சில நாட்களுக்கு முன், பள்ளிக்கு செல்லும் போது கீழே கிடந்த பையில் ரூ.50,000 பணம் இருப்பதை கண்டான். அதனை தனது ஆசிரியர் மூலம் போலீசில் ஒப்படைத்தான்.

அந்த சிறுவனை நேரில் அழைத்து மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் சிறுவன் யாசினை பாராட்டினார். பிரபலங்கள் பலரும் சிறுவனின் நேர்மையை பாராட்டினர். வறுமையில் வாடும் அவனுக்கு உதவ ரஜினி மன்ற நிர்வாகிகள் யாசினை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் தனக்கு உதவிகள் எதுவும் வேண்டாம் எனவும், தனக்கு ரஜினியை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாகவும் தெரிவித்துள்ளான்.


அந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் ரஜினி, சிறுவன் யாசினை சந்தித்தார். அப்போது யாசினை பாராட்டிய ரஜினி அவனுக்கு தங்க செயினை பரிசாக வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, சிறுவன் யாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன். அவனது படிப்பு செலவை ஏற்கிறேன். அவன் என்ன படிக்க நினைத்தாலும் படிக்க வைப்பேன் என அறிவித்தார்.


தொடர்ந்து பேசிய ரஜினி, மற்ற மாநிலங்களை விட தமிழகம் கல்வி வளர்ச்சியில் சிறந்து விளங்குகிறது. பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் லோக்ஆயுக்தா கொண்டு வந்துள்ள வரவேற்கதக்கது. அதிகாரம் உள்ள அமைப்பாக அது செயல்பட வேண்டும்.


லோக்சபா, சட்டசபை தேர்தல் ஒரே நேரத்தில் நடத்துவது நல்ல விஷயம். லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படும். 8 வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை. இது போன்ற பசுமை வழிச்சாலை திட்டங்களால் தான் நாடு வளம் பெறும் என்றார்.ரஜினியை சந்தித்ததன் மூலம் தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாகவும், தான் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் சிறுவன் யாசின் தெரிவித்துள்ளான்.


Advertisement
கருத்துகள் (16) கருத்தைப் பதிவு செய்ய
விஷாலின் மிகப் பெரும் வசூல் படமான 'இரும்புத்திரை'விஷாலின் மிகப் பெரும் வசூல் படமான ... இறைவி டீமை ரஜினி படத்தில் இறக்கிவிட்ட கார்த்திக் சுப்புராஜ் இறைவி டீமை ரஜினி படத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (16)

Endless - Chennai,இந்தியா
16 ஜூலை, 2018 - 07:45 Report Abuse
Endless யாசின் கண்ணா, பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்... எங்களது இந்த மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உனது பெற்றோரையும் சாரும்... கடவுளின் பரிபூரண கடாட்சம் உனது நேர்மை பண்பிற்கு, என்றுமே உண்டு...
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
16 ஜூலை, 2018 - 04:37 Report Abuse
meenakshisundaram ஐயோ முதல்லே லதா ரஜினிகாந்த் கொடுக்க வேண்டியதை கொடுக்க ஏற்பாடு பண்ணுங்க எங்க தலைவா?வெளியே போகவே அசிங்கமா இருக்கு,
Rate this:
Manian - Chennai,இந்தியா
16 ஜூலை, 2018 - 02:27 Report Abuse
Manian படம் எடுக்க வாங்குன காசை திருப்ப தராத கடங்காரன் எப்படி உதவி செய்யவான்? வெறும் கண்டதற்க இருந்த நாட்கள் மறந்து போச்சே முஸ்லிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற்றால் ஒரு கோடி ருவா போட்டு ஸ்காலர்ஷிப்பு கொடுக்கலாமே இந்த பையன் எங்கே படிச்சு முயூனுக்கு வரப்பரானுனு நெனைச்சு இப்படி சொன்ன, ஒருவேளை அவன் படிச்ச்சு காலேஜுக்கு -மருத்துவம் படிக்க போகணும்ன்னா டெப்பாஸிட் செஞ்சிடாரா?
Rate this:
vignesh - India,இந்தியா
15 ஜூலை, 2018 - 19:36 Report Abuse
vignesh இவர் சமீபத்தில் ராமகிருஷ்ணர் பற்றி கூறியவை தவறானவை. ஒரு கால கட்டத்தில் இவருக்கு அசைக்க முடியாத பிம்பம் இருந்தது. இப்போது இதை வைத்து ட்ரோல்ல செய்வார்கள் என்ரூ அங்கலாய்க்கிறார். காலம் மாறிவிட்டது. அந்த பிம்பம் ஆட்டம் கண்டு விட்டது.
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
15 ஜூலை, 2018 - 17:31 Report Abuse
Mirthika Sathiamoorthi ஐயோ அம்மா...யாருக்கும் தெரியாம ஒரு உதவி பன்னுன்னா கோடி கோடியா சம்பாரிச்சு தமிழக மக்களுக்கு என்ன செஞ்சிங்கன்னு கேக்குறீங்க..சரி எல்லாருக்கும் தெரியிற மாதிரி ஏதாச்சும் பன்னுன்னா வெட்டி விளம்பரமான்னு கேக்குறீங்க...மண்டைய பிச்சுக்கணும் போல இருக்கு..
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in