ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கு சினிமாவை சுழற்றி அடித்த ஸ்ரீலீக்ஸ் புயல், தற்போது தமிழ் சினிமாவில் தமிழ்லீக்ஸ் என்ற பெயரில் மையம் கொண்டுள்ளது. தமிழ் திரையுலகில் தன்னை நம்ப வைத்து ஏமாற்றிய திரைப்பிரபலங்களின் பெயர்களை கடந்த சிலதினங்களாக பேஸ்புக்கில் வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் ஆகியோர்களின் பெயரை வெளியிட்ட ஸ்ரீரெட்டி, அடுத்த யாரை வெளிப்படுத்த போகிறார் என கோலிவுட் சினிமாவே கலங்கி போய் இருக்கிறது.
இந்நிலையில் விஷால் தன்னை மிரட்டுவதாக பேஸ்புக்கில் தெரிவித்திருக்கிறார் ஸ்ரீரெட்டி. அதில், தமிழ் நடிகர் விஷாலிடமிடருந்து எனக்கு மிரட்டல் வருகிறது. ஆனாலும் கோலிவுட்டின் கருப்பு பக்கத்தில் உள்ள ரகசியத்தை வெளியிடுவேன் என கூறியுள்ளார்.