இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
2018-ம் ஆண்டின் முதல் அரையாண்டு இரண்டு வாரங்களுக்கு முன்பு கடந்து போனது. அந்த அரையாண்டில் வெளிவந்த சுமார் 70க்கும் மேற்பட்ட படங்களில் 'இரும்புத் திரை, இருட்டு அறையில் முரட்டு குத்து, டிக் டிக் டிக்' ஆகிய படங்கள்தான் வசூலையும், லாபத்தையும் தந்த படங்களாக அமைந்தன. பெரிய நட்சத்திரங்களின் படங்கள் கூட எதிர்பார்த்த வரவேற்பையும் வெற்றியையும் பெற முடியாமல் தடுமாறின.
அடுத்த அரையாண்டில் பல பெரிய நடிகர்களின் படங்கள் வருகின்றன. அடுத்த சில வாரங்களில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் சில முக்கிய படங்கள் வெளிவர உள்ளன. இதனால், கடும் போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிப்பாளர் சங்கம் பட வெளியீடுகளை ஒழுங்குபடுத்தினாலும், 'தமிழ்ப்படம் 2' தயாரிப்பாளர் சங்கத்திற்குக் கட்டுப்படாமல் வெளிவந்தது பற்றி பலரும் எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகிறார்கள்.
வரும் வாரங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'ஜுங்கா', ஆர்யா நடித்துள்ள 'கஜினிகாந்த்', நயன்தாரா நடித்துள்ள 'கோலமாவு கோகிலா', கமல்ஹாசன் நடித்துள்ள 'விஸ்வரூபம் 2' உள்ளிட்ட படங்களுடன் மேலும் பல படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றுக்கொன்று மோதல் இல்லாமல் படங்கள் வெளிவந்தால் தயாரிப்பாளர்களுக்கு நல்ல தியேட்டர்களும் கிடைக்கும், நல்ல வசூலும் கிடைக்கும். ரசிகர்களுக்கு நல்ல படங்களைப் பார்த்த திருப்தியும் கிடைக்கும்.