ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டு சில வருடங்களுக்கு முன்புவரை பிசியான நடிகையாக மட்டுமின்றி நம்பர் ஒன் கதாநாயகியாகவும் இருந்தார் ஹன்சிகா. ஆனால் சமீபகாலமாக அவருக்கு போதிய பட வாய்ப்புகள் இல்லை.
நீண்ட போராட்டத்துக்குப் பிறகு விக்ரம் பிரபுவுடன் 'துப்பாக்கி முனை', அதர்வாவுடன் '100' ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் ஹன்சிகா. தற்போது கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் U.R.ஜமீல் இயக்குகிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார்.
சில வருடங்களுக்கு முன்பு வரை முன்னணி ஹீரோக்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று இருந்த ஹன்சிகா தற்போது விக்ரம் பிரபு, அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். அது மட்டுமல்ல தற்போது புதுமுக ஹீரோவுக்கு ஜோடியாகவும் நடிக்கும் நிலைக்கு இறங்கிவந்துவிட்டார். அதோடு, தன்னுடைய சம்பளத்தையும் குறைத்துள்ளார்.