டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழில் வெளிவந்த சரபம் படத்தில் அறிமுகமானவர் சலோனி லுத்ரா. முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் கலக்கியவர். ஆனால் அதன் பிறகு அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லை. சமீபத்தில் பார்பிடன் என்ற ஆங்கிலப் படத்தில் நடித்தார். திறமை இருந்தும் வாய்ப்பு இல்லாத சலோனிக்கு இப்போது பெரிய வாய்ப்பு வந்திருக்கிறது. பானுமதி ராமகிருஷ்ணா என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
இது பழம்பெரும் நடிகை பானுமதி ராமகிருஷ்ணாவின் கதை அல்ல. அவள் அப்படித்தான், அவள் ஒரு தொடர்கதை மாதிரி துணிச்சலான ஒரு பெண்ணின் கதை. அந்த பெண்ணின் பெயர் பானுமதி ராமகிருஷ்ணா. இதில் சலோனி துணிச்சலாக பல காட்சிகளில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை ஸ்ரீகாந்த் நாகோட்டி இயக்குகிறார். இதற்கிடையில் வினோதன் என்ற படத்திலும் நடித்து வருகிறார் சலோனி.