பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வருடத்துக்கு ஒரு படத்தில் நடிப்பதால் வருமான இழப்பு என்பதை புரிந்து கொண்ட சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து படங்களில் நடிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
'வேலைக்காரன்' படத்தை தொடர்ந்து 'சீமராஜா' படப்பிடிப்பில் பிசியாக இருந்தவர், அடுத்து ஆர்.ரவிகுமார் இயக்கும் சயன்ஸ் ஃபிக்ஷன் படத்திலும் நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையில், 'ஸ்டுடியோ கிரீன்' கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்க, எம்.ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் பூஜை கடந்த மே மாதம் 2-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. 'வேலைக்காரன்' படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா இணைந்து நடிக்கிறார்.
இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. எனவே 'எஸ்கே-13' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. எம்.ராஜேஷும், சிவகார்த்திகேயனும் முதன் முதலாக இணைந்துள்ள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.