ஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார் | போலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல் | உடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம் | இறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி | எல்கேஜி பற்றி ஆர்.ஜே.பாலாஜி | புல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம் | என்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம் | வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ரகுல் | புதன் முதல் ஒரு அடார் லவ்-க்கு புது கிளைமாக்ஸ் | அதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு |
பிரபல மலையாள சின்னத்திரை சீரியல் இயக்குனர் உன்னி கிருஷ்ணன் மீது அவரது தொடரில் நடித்து வரும் நிஷா சாரங் பாலியல் புகார் கூறினார். இதைத் தொடர்ந்து கேரள மகளிர் ஆணையம் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் உன்னிகிருஷ்ணன் மீது மற்றொரு நடிகையும் புகார் கூறியுள்ளார். மலையாள சினிமாவில் குணசித்ர வேடங்களில் நடிதது வருகிறவர் ரச்சனா. அவர் கூறியிருப்பதாவது:
நான் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு உன்னி கிருஷ்ணன் இயக்கிய தொடரில் நடித்தேன். அவர் என்னை தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார். நான் மறுத்ததால் அவர் என்னை துன்புறுத்தினார். அவமானப்படுத்தினார், தகாத வார்த்தைகளால் பேசினார். அவர் மிகவும் திமிர்பிடித்தவர். சீரியலில் நடிக்கும் பெண்களை அடிமையாக நினைக்கிறவர். சினிமா வாய்ப்பு கிடைத்ததும் சீரியில் இருந்து விலகிக் கொண்டேன். நான் சினிமா நடிகை ஆனதுகூட அவருக்கு பிடிக்கவில்லை, சினிமா வாய்ப்பு கிடைத்த மறுநாளே என்னை சீரியலில் இருந்து விலக்கி விட்டார்.
இப்போது அவர் நிஷாவுக்கும் தொல்லை கொடுத்திருப்பதை கேள்விப்பட்டு மிகவும் வருத்தப்பட்டேன். அவருக்கு நான் ஆறுதல் கூறினேன். நிஷாவுக்கு நீதி கிடைக்க அவருக்கு துணையாக இருப்பேன். மலையாள திரையுலகமும் அவருக்கு துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு ரச்சனா கூறியுள்ளார்.