டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இன்றைய தேதியில் அதிகமான படங்களில் நடித்து வருபவர் விஜய்சேதுபதி தான். தமிழில் 'செக்கச் சிவந்த வானம்', 'ஜுங்கா', 'சூப்பர் டீலக்ஸ்', 'சீதக்காதி', '96', ஆகிய படங்களில் நடித்துவரும் அவர், ரஜினி நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படம், சேதுபதி படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கும் படம் என மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.
அதோடு சிரஞ்சீவி நடிக்கும் 'சாய் ரா நரசிம்மரெட்டி' படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகிறார் விஜய்சேதுபதி. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி தொடர்ந்து நடந்து வரும் நிலையில் கன்னடப்படம் ஒன்றிலும் நடிக்கிறார்.
ஷிவ்கணேஷ் இயக்கும் 'அக்காடா' என்ற அந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் சாண்டல்வுட்டிலும் அறிமுகமாகிறார் விஜய்சேதுபதி! அந்த படத்தில் வசந்த் விஷ்ணு என்பவர் கதாநாயகனாக நடிக்கிறார். விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.