'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
வெங்கட் பிரபு இயக்கியுள்ள 'பார்ட்டி' படத்தை தயாரிப்பாளர் இன்னும் ரிலீஸ் செய்யவில்லை. லைகாவிடம் படத்தை விற்றுவிட்டதால் ரிலீஸ் குறித்து தான் முடிவெடுக்க முடியாமல் தவித்து வந்தார். அதன் பிறகு லைகாவிடமிருந்து பார்ட்டி படத்தை திரும்பப்பெற்று தானே வெளியிடும் வேலைகளில் இறங்கிவிட்டார்.
பார்ட்டி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதால் சிம்பு நடிக்கும் படத்தை இயக்கும் வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் வெங்கட் பிரபு. படத்திற்கு
மாநாடு என்ற தலைப்பை அறிவித்துள்ளனர்.
சிம்புவும் வெங்கட்பிரபுவும் முதன் முறையாக இணையும் இந்த படத்தை அமைதிப்படை-2, 'கங்காரு' படங்களைத் தயாரித்தவரும், தற்போது, 'மிக மிக அவசரம்' என்ற படத்தை இயக்கி, தயாரித்து வருபவருமான சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
எப்போதுமே தான் இயக்கும் படத்தை ரிலீஸ் செய்த பிறகே தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவார் வெங்கட் பிரபு. சிம்பு படத்தின் மூலம் வெங்கட் பிரபுவும் புதிய பாணிக்கு மாறியிருக்கிறார்.