Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜோதிகாவுக்காக கெஸ்ட் ரோலில் நடிக்க சம்மதம்

10 ஜூலை, 2018 - 16:48 IST
எழுத்தின் அளவு:
Simbu-do-a-guest-role-for-Jyothika

இதுவரை எத்தனையோ படங்களில் ஹீரோவாக நடித்துள்ள சிம்பு, இளம் நடிகர்களில் அதிகமான படங்களில் கெஸ்ட்ரோலில் நடித்த நடிகர் சிம்புதான் என்று சொல்லுமளவுக்கு, கோவா, காக்காமுட்டை, கண்ணா லட்டு தின்ன ஆசையா உட்பட பல படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்.

இந்தப்பட்டியலில் இப்போது லேட்டஸ்ட் இணைப்பு... ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா முக்கிய பாத்திரத்தில் நடித்து வரும் 'காற்றின் மொழி' படம். இந்தப்படத்தில் ஜோதிகாவுடன் விதார்த், லட்சுமி மஞ்சு ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

ஒரேகட்டமாக தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் சிம்பு. ஏற்கெனவே 'சரவணா', 'மன்மதன்' ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள சிம்புவும், ஜோதிகாவும், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'செக்கச் சிவந்த வானம்' படத்திலும் நடித்துள்ளனர். 'செக்கச் சிவந்த வானம்' படப்பிடிப்பின்போது காற்றின் மொழி படத்தில் கெஸ்ட்ரோலில் நடிக்கும்படி கேட்டிருக்கிறார் ஜோதிகா.

அவரது வேண்டுகோளை தட்ட முடியாமல் 'காற்றின் மொழி' படத்தில் நடிக்க சம்மதம் சொன்னாராம். இந்தப்படத்தில் சிம்பு நடிப்பதன் மூலம் ஜோதிகாவும், சிம்புவும் நான்காவது முறையாக இணைந்து நடித்துள்ள படம் என்ற பெருமை காற்றின் மொழி படத்துக்குக் கிடைத்திருக்கிறது. ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற 'தும்ஹரி சுலு' படத்தின் ரீ-மேக்தான் 'காற்றின் மொழி'.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in