வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
இயக்குனர் மகிழ் திருமேனியின் உதவியாளர் கிருஷ்ணபாண்டி இயக்கி உள்ள படம் எம்பிரான். ரஜீத் மேனன், ராதிகா ப்ரீத்தி, சந்திரமவுலி, கல்யாணி நடராஜன், கிஷோர், உள்பட பலர் நடித்துள்ளனர். ப்ரசன் பாலா இசை அமைத்துள்ளார், எம்.புகழேந்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். பஞ்சவர்ணம் பிலிம்ஸ் சார்பில் பி.பஞ்சவர்ணம் மற்றும் வி.சுமலதா தயாரித்திருக்கிறார்கள். படம் பற்றி தயாரிப்பாளர் பஞ்சவர்ணம் கூறியதாவது:
காதல் கதைகளும் மக்களுக்கு பிடிக்கும், திகில் கதைகளும் மக்களுக்கு பிடிக்கும். இயக்குனர் கிருஷ்ணபாண்டி இந்த இரண்டையும் சமவிகிதத்தில் கலந்து எம்பிரான் கதை சொன்னபோதே எனக்கு பிடித்து விட்டது. உடனடியாக எந்த யோசனையும் இல்லாமல் தயாரிக்க ஒப்புக் கொண்டேன். எப்படி விறுவிறுப்பாக கதை சொன்னாரோ அப்படியே படத்தையும் எடுத்திருக்கிறார். காதலும், திகிலும் கலந்த வித்தியாசமான அனுபவத்தை படம் கொடுக்கும். இந்தப் படத்திற்கு பிறகு கிருஷ்ணபாண்டிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்கிறார் பஞ்சவர்ணம்.