காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு முடிவுகட்டும் நேரம் : ரஜினி | ஹாலிவுட் படத்திற்கு முருகதாஸ் வசனம் | தலைப்பு வைக்க கட்டுப்பாடு வருமா? | கோழைத்தனமான தாக்குதல் : சூர்யா கண்டனம் | தாய்மாமன் மகனை திருமணம் செய்தார் மதுமிதா | தாய் மதம் திரும்பினார் 'தாடி' பாலாஜி | 'கண்ணே கலைமானே' படம் : விஜய் சேதுபதி பாராட்டு | கசந்த காதல்; காதலர் தினத்தில் நடிகை தற்கொலை | திருமணத்திற்குப் பின் சாயிஷா நடிப்பாரா ? | “சகுனி, அலெக்ஸ் பாண்டியன், அழகுராஜா” வரிசையில் தேவ் |
சிவா - சிஎஸ்.அமுதன் கூட்டணியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான படம் தமிழ்ப்படம். ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் கிண்டலடித்த அந்தப்படம் ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றது. தற்போது இதன் இரண்டாம் அதே கூட்டணியுடன் 'தமிழ்ப்படம்-2' என்ற பெயரில் உருவாகி உள்ளது. ஐஸ்வர்யா மேனன் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
படத்தின் பர்ஸ்ட் லுக்கே துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை கிண்டல் செய்யும் விதத்தில் வெளியிடப்பட்டிருந்தது. தொடர்ந்து டிரைலர் வெளியானபோது அரசியல்வாதி தொடங்கி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் வரை அனைவரையும் கலாய்த்து இருந்தனர்.
இந்நிலையில் படம் ரிலீஸ்க்கு தயாராகிவிட்டதால் ஒவ்வொரு போஸ்டரையும் வித்தியாசமாகவும், அதேசமயம் மற்றவர்களை கலாய்க்கும் விதமாகவும் வெளியிட்டு வருகின்றனர். அதன்படி யு சான்று பெற்ற போது பாகுபலியை கலாய்த்து போஸ்டர் வெளியிட்டனர். ஹீரோயின் போஸ்டரை வெளியிட்ட போது சமீபத்தில் வெளிவந்த சாவித்திரியின் படத்தை கலாய்த்து வெளியிட்டனர்.
இப்போது ரஜினியின் காலா போஸ்டரை கலாய்த்துள்ளனர். இன்று வெளியாகி உள்ள ஒரு போஸ்டரில் சிவா, காலா ரஜினி போன்று கறுப்பு நிற உடை மற்றும் கண்ணாடி அணிந்து நாற்காலியில் அமர்ந்துள்ளார். காலாவில் ரஜினியுடன் ஒரு நாய் இருந்தது. 'தமிழ்ப்படம்-2' போஸ்டரில் சிவாவுடன் டயனோசர் இடம்பெற்று இருக்கிறது.
ஏற்கனவே படத்தின் தலைப்பையே தமிழ்ப்படம் 2.0 என வைத்து ரஜினியின் 2.0 படத்தை கிண்டல் செய்தவர்கள், இப்போது மேலும் மேலும் ரஜினியை கலாய்த்து வருகின்றனர்.