ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குநர் ராதாமோகன், பா.ரஞ்சித் போன்றவர்கள் தான் தனக்கு நெருக்கமான நண்பர்களுக்கு தொடர்ந்து தங்களுடைய படங்களில் வாய்ப்பு கொடுப்பார்கள். இந்தப்பட்டியலில் கார்த்திக் சுப்பராஜ் சேர்ந்துவிட்டார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் ரஜினியுடன் மோதும் வில்லனாக விஜய்சேதுபதியும் அவருடைய அடியாளாக பாபி சிம்ஹாவும் நடிப்பதாக சொல்லப்படுகிறது. சனந்த் ரெட்டி - மேகா ஆகாஷ் இளம் காதல் ஜோடிகளாக நடித்து வரும் இந்தப்படத்தில் இப்போது மற்றொரு நடிகரும் இணைந்துள்ளார்.
அவர் வேறு யாருமல்ல, 'ஜோக்கர்' படத்தின் நாயகனான குரு சோமசுந்தரம். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஏற்கெனவே 'ஜிகர்தண்டா' படத்தில் நடித்துள்ள இவர், 'பெஞ்ச் டாக்கீஸ்' தயாரித்துள்ள குறும்படத்திலும் நடித்துள்ளார்.
இந்த படத்தில் குரு சோமசுந்தரத்திற்கு முக்கியமான கேரக்டர் என்று தகவல் அடிபடுகிறது. ரஜினி நடிக்கும் படத்தில் குரு சோமசுந்தரம் நடிப்பது இதுவே முதல் முறை! பல படங்களில் நடித்தும் இன்னும் வெளிச்சத்துக்கு வராமல் இருக்கும் குரு சோமசுந்தரத்துக்கு இந்தப்படம் மேலும் புகழ்வெளிச்சத்தைப் பாய்ச்சும் என்று நம்பலாம்.