விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'சஞ்சு', கடந்த வாரம் 29ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. வெளியான சில நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூலித்த இந்தப் படம் ஒரு வார காலத்திற்கள் 250 கோடிக்கும் மேல் வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிகர வசூல் மட்டும் 200 கோடி என்கிறார்கள்.
இதன் மூலம் 'சஞ்சு' படம், ஒரு வாரத்திற்குள் அதிக வசூலைப் பெற்ற படங்களில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு முன் வெளிவந்த படங்களில் சுல்தான் படம் 395 கோடியையும், பாகுபலி 2 படம் 388 கோடியையும், தங்கல் 365 கோடியையும் வசூலித்து. அந்த வரிசையில் 'சஞ்சு' படம் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவில் மட்டும் ஒரு வாரத்திற்குள் அதிக வசூலைப் பிடித்த படங்களாக இதற்கு முன் 'பாகுபலி 2' படம் 247 கோடி, டைகர் ஜிந்தா ஹை 206 கோடி ஆகிய படங்கள் இருந்தன. இப்போது இந்தப் பட்டியலில் 'சஞ்சு' படம் 202 கோடி வசூலித்து சேர்ந்துள்ளது.
'சஞ்சு' படத்திற்காக படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி, சஞ்சய் தத்தாக நடித்த ரன்வீர் சிங் ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.