இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
குடி போதையில் கார் ஓட்டிய பாரதிராஜா மகன் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ். "தாஜ்மஹால், கடல் பூக்கள், அன்னக்கொடி" உள்ளிட்ட சில படங்களில் நடித்து உள்ளார். இவர், தனது விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ., காரில் மது அருந்தி வாகனம் ஓட்டியதாக தெரிகிறது. ஸ்டெர்லிங் ரோட்டில் வந்தபோது வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், மனோஜிடம் விசாரணை நடத்தினர். அவர் மது போதையில் காரை ஓட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அவரின் காரை பறிமுதல் செய்த போலீசார், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.