Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கீர்த்தி சுரேஷை கலாய்த்த தமிழ்ப்படம் 2

06 ஜூலை, 2018 - 16:47 IST
எழுத்தின் அளவு:
Tamilpadam-2-funs-Keerthy-suresh-movie

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள படம் தமிழ்ப்படம்-2. ஏற்கனவே அவர்கள் வெளியிட்ட தமிழ்ப்படம் என்ற படத்தின் இரண்டாம் பாகம் என்ற போதும், இந்த படத்திற்கு தமிழ்ப்படம் 2.0 என்று பெயர் வைத்திருந்தனர். ஆனால் அந்த தலைப்பு கிடைக்கவில்லை என்றதும் இப்போது தமிழ்ப்படம் 2 என்று மாற்றி படத்தை இந்த மாதம் வெளியிட தயாராகி விட்டனர்.

இந்த படத்தின் முதல் போஸ்டரிலேயே துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் சமாதிக்கு முன்பு அமர்ந்து தியானம் செய்தது போன்று, மிர்ச்சி சிவா இடம்பெற்ற காட்சியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.


அதன்பிறகு இந்த படத்தின் டிரைலர், பாடல் என ஒவ்வொன்றும் வெளியானபோதும் சினிமா, அரசியல் வட்டாரத்தை சேர்ந்த பல பிரபலங்களை கலாய்த்திருப்பது தெரிய வந்தது. அதோடு சென்சாரில் படத்திற்கு யு சான்று கிடைத்தது. அதையும் பாகுபலி போஸ்டருடன் ஒப்பிட்டு கலாய்த்தனர்.


தற்போது படம் ஜூலையில் வெளியாகயிருக்கும் செய்தியை வெளியிட்டுள்ள போஸ்டரில் தமிழ்ப்படம்-2 படத்தின் போட்டோவை வைக்காமல், நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷின் படத்தை வைத்து கலாய்த்துள்ளனர்.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
எந்த நடிகையையும் போட்டியாக நினைப்பதில்லை : வரலட்சுமிஎந்த நடிகையையும் போட்டியாக ... பாகுபலிக்கு முந்தைய கதையை மூன்று பாகங்களாக சொல்லும் ராஜமவுலி பாகுபலிக்கு முந்தைய கதையை மூன்று ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
09 ஜூலை, 2018 - 00:06 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கீர்த்தி சுரேசுக்கு இது ஒரு பிளஸ் தான். குணா கமலையும், நாயகன் கமலையும் கலாய்ப்பது எதற்கு? தனித்து நிற்கும் நடிப்பு ... இதை தவிர்க்கமுடியாது.. Just enjoy it..
Rate this:
07 ஜூலை, 2018 - 09:08 Report Abuse
RajaSekaran old actor name ennavam
Rate this:
06 ஜூலை, 2018 - 17:57 Report Abuse
வெற்றிகுமரன் இந்த அளவுக்கு இவர்களுக்கு கற்பனை பஞ்சமா? டிவியலதான் சினிமா காட்சிகளை வைத்து காமடி ஷோ செய்வார்கள். சினிமாவயே கிண்டலடிக்கும் சினிமா, மிக கேவலமான யுத்தி. மிர்சி சிவாவின் நடிப்பை கி்ண்டலடித்தாலே 100 படம் எடுக்கலாம், அப்படி இருக்க இவர்களுக்கு எதற்கு இந்த வெட்டிவேலை. சினிமாவே தேவையில்லாத ஒன்று, இதில் சினிமாவை நக்கலடிக்கும் படம் மிக அற்பமான கேவலம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in